கு.அரசேந்திரன்
சொல்லாய்வு அறிஞர் கு.அரசேந்திரன் அவர்களுக்கான தளம்
Thursday, February 24, 2011
Monday, January 24, 2011
Grand Gapsa Of The 21st Century - உலகத்துக்குத் தமிழர் தந்த கொடை

சொல்லாய்வறிஞர் கு.அரசேந்திரன் உரை
தை 4, 2042 கருத்தரங்குக் காணொலிகள்
http://www.youtube.com/watch?v=-A9XvNHrYoA

Saturday, January 8, 2011
தமிழால் இறைவனை வழிபடுவோம்
-முனைவர் கு. அரசேந்திரன், சென்னை கிறித்தவக் கல்லூரி.
தமிழ் மக்கள், தம் சொந்த மண்ணாகிய தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் உள்ள கோவில்களில் தத்தம் வழிபடும் கடவுளைத் தமிழால் வழிபடாமல் பிறமொழியாகிய சமற்கிருதத்திலேயே மிகுதியும் வணங்கி வருகின்றார்கள். இப்பழக்கம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கட்டிய கோவில்களிலும் தொடர்வதாகவே தெரிகின்றது. சிவனியம், மாலியம் ஆகிய தொல்தமிழ்ச் சமயக் கோவில்களில் வழிபாடாற்றும் தமிழர்கள் சமற்கிருதம் ஆகிய அயல்மொழிக்கு அடிமைப்பட்டு கிடக்கும் நிலையைச் சுட்டிக்காட்டி, அந்நிலையுருவான வரலாற்றை விளக்கி அதில் நிகழ வேண்டிய உரிமை மீட்புத் தேவையைப் பேசுவதாகவே இக்கட்டுரை அமைகின்றது.
தமிழிலுள்ள மெய்யியல் சொற்களுள் இறை என்பது ஒன்றாகும். பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில் இரண்டிடங்களில் இச்சொல் வந்துள்ளது. இவ்விரண்டிடத்திலும் வந்துள்ள இறையயன்ற சொல்லுக்குத் தங்குதல் என்பதே பொருளாகும்.அரசு என்பது மக்கள் அனைவரையும் காக்கும் ஓரமைப்பாகும். ஒரு நல்ல அரசன் அவனது ஆணைகள் வழியாக எல்லா இடத்திலும் தங்கியிருக்கிறான் என்று கருதப்படுகிறான். இறை என்னும் சொல் ஆண்பால் ஈறாகிய அன் பெற்று இறைவன் எனத் தொல்காப்பியத்தில் ஆளப் பெற்றுள்ளது. தொல்காப்பியத்தை ஒட்டிய சங்கப் பனுவல்களிலும் பல இடங்களில் அரசன், இறைவன் எனக் குறிப்பிடுகிறான். (புறம் 18 ‡ 26, 48 ‡ 5) தமிழ்மறைத் தந்த திருவள்ளுவப் பேராசனும் அரசனை இறைவன் என்ற சொல்லால் குறித்துள்ளார். (குறள் 690, 733)
இன்று நாம் இறைவன் என்று கடவுளையே குறிக்கின்றோம். திருவள்ளுவர் நாம் குறிப்பது போலவே கடவுள் என்ற பொருளிலும் இறைவன் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் ‘புகழ்புரிந்தார் மாட்டு’ (குறள்5) ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவன் அடிசேரா தார்’ (குறள் 10) என்னும் இரண்டிடத்திலும் இதனைக் காணலாம். கடவுள் எனப்படும் பொருளில் இறை என்ற சொல்லும் அன் என்னும் ஈறு சேர்த்து இறைவன் என்று சொல்லப்படும் சொல்லும் எந்த அடிப்படையில் தமிழர்கள் கருதிக் குறித்துள்ளார்கள் எனில், கடவுளாகிய பரம்பொருள் எல்லா இடத்திலும் தங்கியிருக்கின்றது என்பதன் அடிப்படையிலேயே ஆகும். எனவே, தங்குதல் எனப் பொருள்தருவதன் வழியாகத்தான் இறை என்ற சொல் தமிழில் கடவுளைக் குறிக்க வழங்கப் பெற்றது என்பதனை யாம் அறிதல் வேண்டும்.
தமிழர் தம் மெய்யியல் கருத்தை இருவேறு கோணங்களில் நுணுகி நின்று ஆய்வு செய்ய வேண்டும். ஒன்று புறம் சார்ந்தது. பிறிதொன்று அகம் சார்ந்தது. இக்கட்டுரை மிகுதியும் அகம் சார்ந்ததையே அடிப்படையாகக் கொண்டு செல்கின்றது. தொல்காப்பியர் பொருள் அதிகாரத்தில் நால்வகை நிலங்கள் பற்றிக் கூறும்பொழுது :
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
என்று நூற்பா செய்தார். இத்தொல்காப்பிய மரபுப்படியே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் வரும் அகப்பாடல்களில் தெய்வத்தைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளார்கள். தொல்காப்பியத்திலும் சங்கப் பாடல்களிலும் தெய்வம் பற்றிச் சொன்ன செய்திகள் தமிழர் தம் அன்றாட வாழ்வியலில், வழிபாட்டில் புழங்கி வந்த ஓர் இறையியல் மரபுகளேயாகும்.
இவைபற்றிய செய்திகளிலேயே தமிழர்தம் மெய்யியலைக் கண்டுவிட முடியாதென்பதை உணர வேண்டும். அதாவது மக்கள் வாழும் நிலத்தில் தோன்றி நிற்கும் வாழ்வியற் தேவைகள் பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியும் ஆன புறநிலையையயாட்டி எழுந்த வழிபாட்டுத் தோற்றங்களே இவை என்பதை உணர்ந்து தெளிதல் வேண்டும். சான்றோர் மரபில் உள்கி உள்கி மெய்ம்மம் கண்ட அறிவர்கள் மரபில் கண்டு தெளிந்த கருத்துகள் யாவை என்பதையே நாம் பழந்தமிழர்களின் இறைமைக் கோட்பாடு அறிந்தாக வேண்டும். அத்தகைய பகுதி பற்றி அறிதற்கும் நிறையப்பகுதிகள் தொல்காப்பியத்திலும் சங்கப்பனுவல்களிலும் உள்ளன.
தமிழினம் சங்ககாலத்திலேயே உயர்ந்த மெய்ப்பொருள் பிழியலை எட்டிப்பிடித்து விட்தென்பதற்கு நிறையச் சான்றுகளைச் சொல்லலாம் என்றாலும் விரிவஞ்சி ஒரேயயாரு சான்றினைக் கூறவேண்டுமேல் அதற்குக் கணியன் பூங்குன்றனாரின்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலையி ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் போயிற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புறம் 192)
என்னும் ஒரு பாடலே போதுமானதெனலாம்.
சங்க காலத்தில் தமிழர்கள் கடவுளை எப்படி வழிபட்டார்கள் என்பதை மிகச் சுருக்கமாகவேனும் அறிந்து கொள்வது இக்கட்டுரைக்குத் தேவையயனக் கருதுகிறோம். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களில் வணங்கப் பெற்ற வழிபாடுகள் யாவும் ஒரு நன்றியுணர்ச்சியில் வகைப்பட்டனவேயாகும். ஆடுமாடுகளைச் சார்ந்து நின்ற முல்லை நில மக்கள் தம் ஆநிரைகளின் மேய்ச்சலுக்கு வேண்டிய புல்லுக்கு அடிப்படையான மழையையும் மழையின் மூலமான மேகத்தையும் வணங்கினர். மால் என்பதற்கு கருமை என்பதே முதற்பொருளாகும்.
மேகம் கருமையாக இருந்தபடியால் அதுபோல் கரியநிறமுடைய உருவைக் கடவுளாகப் படைத்து வழிபட்டனர். அதுவே மால் வழிபாடாகும். திரு எனும் சிறப்பு அடையைச் சேர்த்து திருமால் என வழங்குவதாயிற்று. குறிஞ்சியில் வேட்டையாடி வாழ்ந்த தொல் தமிழ்மக்கள் தம் தொழிலுக்கேற்ப கூர்க்கருவியான வேலினை வீரனொருவன் கையிற் கொடுத்து தம்மை விலங்குகளிலிருந்து காக்கும் தீப்பந்தத்தின் அடையாளமாகச் செந்நிறத்தை அவனுக்கு அளித்து அந்நிலத்தின் அழகிய பறவையாகிய மயிலில் அவன் அமர்ந்துவரின் அழகாக இருக்குமென நினைத்து அதனையே ஊர்தியாக அமைத்து அழகும் ஆற்றலும் உடையவன் என்னும் பொருளை உணர்த்தும் முருகு என்னும் சொல்லால் ஓர் உருவத்தை உருவாக்கி வழிபட்டனர்.
அவ்வழிபாடே முருக வழிபாடாயிற்று. இவ்வாறாக ஒவ்வொரு நிலத்திலும் வாழ்ந்த மக்கள் தம் வாழ்க்கையையயாட்டி ஒவ்வொரு உருவத்தை உருவாக்கி தத்தமக்குரிய இசைக் கருவிகளைக் கொண்டு இசைத்து ஆடியும், பாடியும் வழிபட்டு வந்தனர். பழந்தமிழ் மக்கள் வழிபட்ட கடவுள் வடிவங்கள் பல ஆயினும் கடவுள் எனப்படும் ஆற்றல் அருவமாய் இருந்து இக்கடவுள் படிங்களின் வழியாக அனைத்தையும் கண்காணித்து இயக்கி வருகிறதென்று நம்பினார்கள். இதற்குச் சான்றாக ‘விரிச்சிக் கேட்டல்’ என்னும் பழக்கம் அந்நாளில் இருந்ததை எடுத்துக்காட்டலாம்.
எங்குமாய் நிறைந்து எல்லாவற்றையும் அதனதன் பாட்டில் இயக்கும் பரம்பொருளை வணங்குவதனை பழந்தமிழர்கள் உணர்ச்சியாய்க் கொண்டிருந்தனர். கடவுளாகக் கற்பிதம் செய்து படைத்த படிமைகளை அல்லது கற்களை இன்று போலவே கோயில்களிலும், பொதுவிடங்களிலும், ஆற்றங்கரைகளிலும், வயல்வெளிகளிலும், கடற்கரைகளிலும், மலைகளிலும், வீட்டறைகளிலும் வைத்து வணங்கியிருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் எதனெதனைத் தெய்வமெனக் கருதுகிறார்களோ அதுவதுவே அவரவர்களுக்கு வழிபடு தெய்வமாகும். எந்தத் தெய்வத்தை தெய்வமெனக் கருதி வழிபட்டாலும் அந்தத் தெய்வம் அவர்களுக்கு துணைநிற்குமெனப் பழந்தமிழர்கள் நம்பினர். அகநாநூற்றுப்பாடல்களில் செங்கல்லால் நெடுஞ்சுவர் எழுப்பிக் கோவில்கள் கட்டப்பட்ட செய்தி வருகின்றது. நெடிய கட்டடங்கள் அல்லாமல் ஊர்ப்பொது இடத்தில் (அம்பலத்தில்) சிறியதாகக் கட்டப்பட்ட கோயில்களிலும் மக்கள் அணையாவிளக்கு ஏற்றி வைத்து கடவுளை வழிபட்டு வந்துள்ளனர். பட்டினப்பாலையில், பெண்கள் மாலையில் குளித்து அணையாவிளக்குடைய பொதியிலில் மலரும் மெழுக்கமும் கொண்டு அங்குள்ள தெய்வம் உறையும் தறியாகிய கந்தினைத் தொழுத செய்தி சொல்லப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் உள்ளதைவிடக் கோயில்கள் அதிகம் என்பர். அதாவது இந்தியாவில் உள்ள கோயில்களில் பாதிக்கோயில்கள் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பாதிக் கோயில்கள் தஞ்சை மாவட்டத்திலும் உள்ளன என்பர். சீரழியும் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் என்ற நூலில் திரு.ப.நெடுமாறன் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மொத்தக் கோயில்கள் 32130 என்பார். தேவார மூவரால் பாடப் பெற்ற கோயில்கள் 274 என்பதும் ஆழ்வார்கள் சிறப்பித்துப் பாடிய திருமால் தலங்கள் 108 என்பதும் அறிய வேண்டிய செய்தியாகும். கோயில்கள், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் என்ன காரணத்தினால் இவ்வாறு பெருக்கமுற்றன என்றும் எந்தெந்த காலகட்டத்தில் பெருகின என்றும் அறிவது பெரிய ஆய்விற்குட்பட்டதாகும். அவ்வளவு எளிதாக இவற்றிற்கு விடை சொல்ல முடியாது என்றாலும் தமிழால் இறைவனை வழிபடுவோம் என்றத் தலைப்புப் பற்றிச் சிந்திக்கும் பொழுது சிறிதாவது இதுபற்றி நாம் பார்த்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
இன்றைய இந்திய வரலாறு என்பது கடந்த இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேலாகச் சமயப் பூசல்கள் இருந்து வந்த நிகழ்வாகும். உலகப் பெருஞ்சமயங்களில் ஒன்றான பெளத்தத்தின் மூலவரான கெளதம புத்தர் பிறந்த நாடும் இந்தியாவே இந்திய சமய தத்துவங்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய சமணசமயத்தின் மூலவரான மகாவீரர் பிறந்த மண்ணும் இந்தியாவே. இவ்விரண்டிற்கும் மேலாக இந்தியா எனப்படும் பழந்தமிழகமாகிய நாவலந்தீவினுள் இருந்த தொல்தமிழ் மக்களின் இயற்கை வழிபாடும் சிந்துவெளி நாகரிகக் காலத்திலேயே தோன்றி வளர்ந்து செல்வாக்குப் பெற்றிருந்த சில வழிபாடும் நடைபெற்ற இடமும் இந்தியாவே. இவற்றுடன் அறிவு முதிராத வேள்வி வழிபாட்டொடு புனைவுகளையும் சேர்த்துக் கலந்து உருவாக்கி இருக்கின்ற இந்துசமயம் என்பது பெரிய அளவிலான எண்ணிக்கையுடன் உள்ள நாடும் இவ்விந்திய நாடேயாகும். அத்துடன் இந்து சமயத்திற்கு எதிரானதெனப்படும் இசுலாம் சமயமும் குறிப்பிடத் தகுந்த அளவில் நிறைந்திருக்கும் நாடும் இவ்விந்திய நாடேயாகும். சுருங்கச் சொன்னால் பலப்பலவான சமயமூட்டமே நிறைந்த நாடாக இந்தியா இருந்து வருகின்றதெனலாம். இவ்வாறான பலசமயப் பூசல்களும், சமயஞ்சார்ந்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ள நிலைமைகளும் எண்ணற்ற கோயில்கள் இங்கு எழுவதற்குக் காரணமாகி இருக்கலாம் என்று எண்ணுவதில் தவறிருக்க முடியாது.
இந்தியாவில் பெரியதோர் பக்தி இயக்கம் நாடு முழுவதும் பரவியமைக்கு என்ன காரணம்? அப்பக்தி இயக்கம் எங்கே முதலில் தோன்றியது என்பதும் அறியவேண்டியதாகும். கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் தோன்றிய காரைக்கால் அம்மையாரே தமிழில் பக்தி இயக்கத்தை உருவாக்கி வளர்த்தவர்கள் என்ற நூலில் குறித்துள்ளதாகப் பெரியபுராண ஆய்வு நூலாசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் சொல்லியுள்ளார். மேற்குறிப்பிட்டது உண்மையானால் தமிழ்நாட்டில் ஏன் பக்தி இயக்கம் தோன்ற வேண்டும்? ஞானசம்பந்தரும் அப்பரும் எதற்காகப் பக்தி இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் கேட்டு, நாம் அதற்குரிய விடை கண்டாக வேண்டும்.
திருஞானசம்பந்தர் தேவார மூவரில் முதலாமவர் ஆவார். திருஞானசம்பந்தர் தமிழால் இறைவனை வழிபட 4000 பாடல்கள் புனைந்து தந்த பெருமைக்கும் உரியவர். இத்தகைய தேவையும் சூழலும் தமிழ்நாட்டில் திருஞானசம்பந்தர் காலத்தில் ஏற்பட்டமைக்குக் காரணம் என்ன? தமிழர்களது தொன்றுதொட்ட சமயமான சிவனியமும் மாலியமும் பல்வேறு இயற்கை வழிபாடுகளும் மிகப்பெரிய இடையூறிற்கு ஆளான காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கிய காலம். இக்காலத்தில் இச்சமயங்களை, வழிபாட்டு முறைகளை அழித்தொழிக்கத் தமிழ்நாட்டில் சமணமும், பெளத்தமும் படையயடுத்தன. இச்சமணமும் பெளத்தமும் தமிழ்நாட்டிலிருந்த தொல்தமிழ்ச் சமயங்களை மட்டுமல்லாது தமிழர்களின் உயிர்மூச்சாய்ப் பல்லாயிரம் ஆண்டுகளாய் உடன் உறைந்து வந்த தமிழையும் அழிக்கப் புகுந்தன. சமணம், பெளத்தம் என்பன தமிழ்நாட்டில் ஊடுருவி வளர்ந்ததற்கும் ஓர் அடிப்படைக் காரணம் இருந்தது. அக்காரணம் யாதென்றால், தொல்காப்பிய காலந்தொடங்கிச் சங்ககாலத்திலும் பரவி, இங்கு செழிக்கத் தொடங்கிய ஆரியச் செல்வாக்கும் அவர்களின் வருணப்பிளவுச் சிந்தனைகளும் அவர்களின் வேள்வி மதத்திற்கும் தமிழர்கள் உடன்பட்டு ஒன்றிப் போய்க் கொண்டிருந்த நிலைமைகளும் ஆகும்.
பெருவீச்சாய்த் தொடங்கிப் பெருவீச்சாய் முடிந்த களப்பிரர் ஆட்சியின் பின், அயற்புல அரசராய் மீண்டும் தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் பல்லவர்கள் ஆவார். இப்பல்லவர்களில் சிலரே சமணம் சார்ந்திருக்க, பலர் சைவ, வைணவம் சார்ந்தோராய் இருந்தனர். சைவ, வைணவம் என்பன இங்கு கொடுத்த வைதீகம் சார்ந்ததைக் குறிக்கும். அதாவது, மிகப்பெரிய அளவில் வேத மதத்தையும் பிராமணர்களின் முழு மேலாளுமையையும் ஏற்றுக் கொண்டமையைக் குறிப்பதாகும். இங்கு பல்லவர்கள் பேணிய பிராமணர்கள் என்போர் வடநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு வடமொழி மட்டுமே அறிந்த பிராமணர்கள் ஆவார்.
இரண்டாம் நந்திவர்மப் பல்லவனின் காசாக்குடிச்செப்பேடு ‘ஸோமாயாஜி’என்பவனுக்கு அம்மன்னன் பெருங்கொடை தந்ததை குறிப்பிடுகிறது. அதிற் குறிக்கப்படும் ‘ஸோமாயாஜி’ வடமொழி வல்லவர் என்றும் அவனைப் பெருமைப் படுத்திக் கூறுகிறது. காஞ்சிபுரம் பல்லவர்கள் நகரமாக விளங்கியது. அங்குக் கடிகை எனப்படும் வடமொழிக் கல்லூரியை நிறுவி வடநாட்டுப் பிராமணர்களையே அதில் தங்கவைத்து அவர்களைப் பல்லவர்கள் காத்தனர்.
தமிழ்நாட்டில் இப்படியாகப் பல்லவர்கள் ஆட்சியில் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் அல்லாத வடமொழிமட்டும் அறிந்த பிராமணர்களைக் குடியேற்றி அவர்களை நிலைக்க வைத்த நிகழ்ச்சி நன்கு நடந்து வந்தது. இவ்விவரங்களைத் ‘தண்டன் தோட்டச் செப்பேடு’ தெளிவாக எடுத்துரைக் கின்றது. பல்லவர்கள் தமிழ்நாட்டுப் பிராமணர்களை நம்பாமல் போனதற்குக் காரணம் அவர்கள் தமிழ்நாட்டு அரசர்களோடு சேர்ந்து கொண்டு களப்பிரர்களைப் போலத் தங்களையும் வெளியேற்றி விடுவார்கள் என்று எண்ணிய அச்சத்தின் விளைவாகவும் இருக்கலாம். எவ்வாறாயினும், கோயில்களில் வடமொழி வேதங்கள் ஓதவும் வைதிகப் புராணங்கள் சொல்லவும் கட்டளைகள் பல்லவர்களாற்றான் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டன என்று ‘தமிழர் சமய வரலாறு’ என்ற நூலில் முனைவர் மா.இராசமாணிக்கனார் கூறுகின்றார்.
பல்லவர்கள் வடபுலத்திலிருந்து கூட்டங்கூட்டமாக வடமொழி வல்ல பிராமணர்களை அழைத்து வந்து நிலமும் வீடும் இறையிலியாகத் (வரியில்லாத நிலம்) தந்து, அக்கிரகாரங்களை ஏற்படுத்தித் தந்த செய்தியைத் தண்டன் தோட்டச் செப்பேடு தெரிவிக்கிறது. ‘ஸ்தானுகுண்டா’ என்ற இடத்தில் 32 வேதியர் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. கும்பகோணத்தின் அருகிலும் நாகப்பட்டினப் பகுதியிலும் இரண்டாம் நந்திவர்மன் வேதியர்களைக் குடியேற்றிய செய்தியும் தண்டன் தோட்டச் செப்பேட்டில் உள்ளது. தண்டன் தோட்டம் என்னும் ஊருக்கு மேற்கே இருந்த ஊரைத் தயாமுகமங்கலம் எனமாற்றிப் பெயரிட்டதுடன்,தயாமுகன் என்னும் வடநாட்டுப் பிராமணன் விருப்பப்படி, மூன்று வேதங்களும் ஸ்மிருதிகளும் வல்ல வடநாட்டுப் பிராமணர் முந்நூற்று எண்மரைக் குடும்பத்துடன் குடியேற்றிய செய்தியும் தண்டன் தோட்டச் செப்பேடே தெரிவிக்கின்றது.
களப்பிரர்கள் ஆட்சியில் சமணர்கள் வழித் தமிழும், தமிழ்ச் சமயமும் சிதைந்த நிலையில் புதிதாய் வந்த பல்லவர்களால் பச்சை வைதிகக் கொள்கையும் பச்சையான வடமொழி வீச்சும் தமிழ்நாட்டில் பரவிய பொழுது தமிழர்களுக்குப் பல்லவர்களின் இப்போக்கு முற்றுமுழுதாய் ஓர் அயன்மையாகவேப்பட்டது.
காலங்காலமாய் உரிமையுடன் கருவறை சென்று தாம் தமிழில் வழிபட்டு வந்த கோயில்களில் வடமொழி மட்டுமே ஓதப்பட்டு முற்றும். அயலான வேள்விகளைச் செய்யும் வடநாட்டுப் பிராமணர் செல்வாக்கு மேலோங்கிய பொழுது தமிழ்மக்களுக்கு வெறுப்பு இவற்றின்மேல் ஏற்படவே செய்தது. இத்தகைய உணர்வலைகள் தமிழ்நாட்டில் இருந்த நிலையிற்றான் ஞானசம்பந்தர் தமிழர்தம் கோயில்தோறும் சென்று தமிழ்ப்பாடல்களைப் பாடிப் புதியதோர் எழுச்சியைத் தமிழ்நாட்டில் உருவாக்கினார்.
“பேர்கொண்ட பார்ப்பான் பிரார்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே”
எனும் திருமூலர் பாடலில் வடமொழியில் சிவனை வழிபாடு செய்தல் கண்டிக்கப்படுகிறது. ஞானசம்பந்தர், தன்னைத் தமிழின் காவலனாகப் பறைசாற்றிக் கொண்டு இனிய இசையில் தமிழ்பாடல்களைப் பாடியபொழுது மக்களெல்லோரும் அவர்பின் திரண்டனர்.
“நற்றமிழுக்கு இன்துணை ஞானசம்பந்தன்
தலைமக னாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்
பழுதில் இறைஎழுதுமொழி தமிழ்விரகன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன்”
எனப் பல பாடல்களில் ஞானசம்பந்தன் தன்னைத் தமிழோடு உறவுபடுத்திப் பாடுகின்றார். தமிழின் அருமையையும் ஞான சம்பந்தர் தம் பாடல்களில் போற்றிப் புகழ்ந்தார். “மறைஇலங்குதமிழ்” “பரவிய செந்தமிழ்” “சங்கம் மலி செந்தமிழ்” என இவ்வாறாக ஞானசம்பந்தர் தமிழை 500 க்கும் மேற்பட்ட இடங்களில் போற்றிப்புகழ்ந்து உரைத்துள்ளார்.
ஞானசம்பந்தர், சமணம் பரவி நின்ற பாண்டிநாட்டிலேயே மங்கையர்க்கரசியார் துணையுடன் சமணத்தைப் பெரிதும் எதிர்த்து அங்கு சைவத்தை வளர்த்தவர் என்றும் அறிகிறோம். இந்நிலையில் சமணம் பரவியிருந்த இடங்களில் மீண்டும் தமிழின் மூலம் வைதிகமாய் இருந்த சைவம் உள்நுழைந்து இங்கும் தம்மை ஊன்றி வைத்துக் கொண்டது.
Wednesday, October 20, 2010
தமிழீழம் தந்த தாமோதரனார்-1
தமிழீழம் தந்த தாமோதரனார்-1
- கு.அரசேந்திரன்
ஆங்கிலேயர் வருகையாலும் ஐரோப்பிய கிறித்துவப் பாதிரிமார்கள் முயற்சியாம் நூல்கள் அச்சு ஊர்தியேறி உலா வந்தன. தமிழ்நூல் ஒன்றுதான் முதன் முதலாக இந்திய மொழிகளிலேயே அச்சேற்றிற்று என்பது வரலாறு. அந்நூல் 1557 இல் கொல்லத்தில் அச்சடிக்கப்பட்டது. அந்நூலின் பெயர் தம்பிரான் வணக்கம் புrஷ்ழியி என்பது. இது, பதினாறு பக்கங்கள் மட்டும் கொண்ட சமய வினாவிடை அமைப்பையுடையது. போர்ச்சுக்கீசிய மொழியிலிருந்த இந் நூற்செய்தியைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யஹன்றி குவிஸ் என்னும் பாதிரியாராவார். தமிழ் நூல்களை அச்சுவயப்படுத்தும் பணியில் முன் நின்ற வரலாற்றுப் பெருமகனாராக ஆறுமுக நாவலர் அவர்களே நமக்குத் தெரிகின்றார். கிறித்துவச் சமயத்தைப்பரப்ப கிறித்துவக் குருமார்கள் கையாண்ட அச்சு முயற்சியே ஆறுமுக நாவலர் அவர்கட்குச் சைவம் பரப்ப வழிகாட்டியாய் இருந்தது. இன்றைய உலகம் உற்று நோக்கும் தமிழீழத்தின் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆறுமுக நாவலர் அவர்களை ஒட்டியே, நம் நூலாசிரியர் தாமோதரர் வாழ்வும் பல்வேறு ஒற்றுமைகளுடன் தொடர்ந்தது.
தாமோதரர் கல்வியும் பணியும்
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.9.1832 ஆம் நாளில் வைரவநாதர் -பெருந்தேவி ஆகியோர்க்கு மகனாய்ப் பிறந்தார் தாமோதரர். இவருடன் உடன்பிறந்தவர் எழுவர். இவருள் மூத்தவர் சி.வை.தா.
சி.வை.தா.வின் தந்தையார் ஓர் ஆசிரியர். ஆதலால் தொடக்கக் கல்வியும் அறநூல்கள், நிகண்டு நூல்கள் போன்றனவும் தந்தை வழியே இவருக்குக் கிடைத்தன. மேனிலைக் கல்வியைத் தந்தவர் சுன்னாகம் முத்துக்குமர நாவலர்.
தமிழ்க் கல்வியில் வேரூன்றிய தாமோதர் 12 ஆம் அகவையின் 1844 தொடக்கம் 1852 முடிய எட்டாண்டுகள் தெல்லிப்பழை மிசன் பாடசாலை, வட்டுக்கோட்டைக் கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கிலக் கல்வியைக் கற்றார்.
1852 இல் கல்வி முடித்த கையோடு 20 ஆம் அகவையில் கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தாமோதரர் ஆசிரியரானார். 1856 இல் ஆறுமுக நாவலரின் ஆங்கில ஆசிரியரும் கிறித்துவ மறைநூல் விவிலியத்தை ஆறுமுக நாவலர் கொண்டு தமிழில் மொழிபெயர்ப்புச் செய்வித்து வெளியிட்டவரும் ஆகிய பெர்சிவல் பாதிரியார் சென்னையில் தொடங்கிய தினவர்த்த மானிக்கு ஆசிரியர் பொறுப்பேற்றார்.
சென்னை வாழ்வில் 1856 இல் புகுந்த தாமோதரர் 1857 இல் சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழாசிரியப் பொறுப் பேற்றார். அத்துடன் அதே ஆண்டு அங்குத் தொடங்கிய பி.ஏ. பட்ட வகுப்பில் சேர்ந்து தேர்வெழுதிச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டாதாரியானார்.
கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்குச் சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து பணிமாற்றம் பெற்றுச் சென்ற தாமோதரர் 39 ஆம் அகவையில் 1871 இல் பி.எல். பட்டமும் பெற்றார். 50 அகவையில் 1882 ஆம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற சி.வை.தா. 1884 இல், தாம் பெற்றிருந்த சட்டக் கல்வியின் சிறப்பால் புதுக்கோட்டை அரசின் முறை மன்ற நடுவரானார். அப்பணியிலிருந்து 1890 இல் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற சி.வை.தா. 1884 இல், தாம் பெற்றிருந்த சட்டக் கல்வியின் சிறப்பால் புதுக்கோட்டை அரசின் முறை மன்ற நடுவரானார். அப்பணியிலிருந்து 1890 இல் ஓய்வு பெற்றார். 1895 இல் பெருமக்கள் பலரின் வாழ்த்துக்களுடன் இராவ் பகதூர் பட்டம் பெற்றார். 1901 சனவரி 1 ஆம் நாள் புரசைவாக்கத்தில் தம் 68 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.
பதிப்பித்த நூல்களும் அருமைப் பாடும்
சி.வை.தாமோதரரின் பலநிலை தமிழ்ப்பணிகளில் முதன்மையானது அவரின் தமிழ்நூல் பதிப்புப் பணியே. அவரால் பதிப்பித்து வெளியிடப்பட்ட நூல்களும் ஆண்டுகளும் பின்வருமாறு அமைகின்றன.
1. நீதி நெறி விளக்கம் 1854
2. தொல். சேனாவரையம் 1868
3. வீரசோழியம் பெருந்தேவனார் உரையுடன் 1881
4. இறையனார் களவியல் 1883
5. தணிகைப் புராணம் 1883
6. தொல்.பொருள். நச் 1885
7. கலித்தொகை 1887
8. இலக்கண விளக்கம் 1889
9. சூளாமணி 1889
10. தொல். எழுத்து 1891
11. தொல்.சொல் (நச்) 1892
அச்சில் வெளிப்போந்த நூல்களாக இவை அமைய, தாமோதரர் 1898 இல் அகநானூற்றை வெளியிடும் நிலைக்கு அணியப்படுத்தி வைத்திருந்த
உண்மையையும் அவர் வரலாற்று வழி அறிகிறோம்.
சி.வை.தா. வெளியிட்ட 11 நூல்களில் தொல், எழுத்து மகாலிங்க ஐயர் பதிப்புத் தவிர, பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன் முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்.
தமிழ்ப்பற்றே பதிப்புப் பணிக்கு அடிப்படை
சி.வை.தாமோதரர்க்கு உயிருணர்வில் கலந்து நிறைந்திருந்த தமிழ்ப்பற்றே தமிழ் நூல் பதிப்பு முயற்சிக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கின்றது. ஓலைச் சுவடிகளாக இருந்த தமிழ் நூல்களெல்லாம் அழிந்தொழிவதைக் கண்டு அவற்றை அச்சுவடிவில் கொண்டு வர அந்நாளில் யாரும் பெருமுயற்சி செய்யவில்லை. அரிய பணியானதால் எளிதாக யாரும் அப்பணியைச் செய்ய முன் வரவில்லை. ஆயினும் இப் பணி மிக இன்றியமையாததோர் மூலப் பெரும்பணி என்பதை நம் தாமோதரர் அறிந்த படியால், தாமே அப் பணியைப் பிறவி முழுவதையும் செய்த பார்ப்பதென முடிவு கொண்டார்.
‘நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையயழுத்துப் பிரதிகளின் கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்கமாட்டாமையயான்றே என்னை இத் தொழிலில் வலிப்பது’.
‘பல பெரும் வித்துவான்கள் இந்நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன பூரணமாக அறிவேன். ஆதலால், பண்டிதர் , கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்னபெரும்பட்டச் சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பல காலந தமிழ் படித்தற்க உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று’.
மாசுமறுவற்ற தமிழ்ப்பற்றாளர் சி.வை.தா.வின் இக் கூற்றுக்களைத் தமிழின உரிமை மீட்புப் பெருந்தலைவர் தந்தை பெரியார் உரைத்த ‘ ஈ.வே.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தை உலகத்திலுள்ள மற்ற உயர்ந்த சமுதாயம் போல் ஆக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளேன். இதைச் செய்து முடிப்பதற்கு எனக்கு யோக்கியத்தை இருக்கிறதோ இல்லையே வேறு யாருமு; இதைச் செய்ய முன் வராத காரணத்தால் நானே இப் பொறுப்பை மேற்கொண்டுள்ளேன். இது வொன்றே எனக்குப் போதுமான தகுதியயன்று நான் கருதுகின்றேன்’ என்ற கருத்துரையுடன் பெரிதும் ஒப்பு நோக்க வேணடும்.
சி.வை.தாமோதரனார் காலத்தில் தொல்காப்பியம் பொருளதிகாரம் பதிப்பிக்க முயன்றோர் இரண்டொரு பிரதிகளே தேடிப் பணி தொடங்கிக் கைவிட்ட நிலையில் நம் தாமோதரர் தேடித் தொகுத்து வைத்திருந்த சுவடிகள் பன்னிரண்டாகும். அவை, திருநெல்வேலிப் படி 2, மதுரைப்படி 2, தஞ்சைப் படி 2, சென்னைப் பட்டினப் படி 3, யாழ்ப்பாணப் படி 2 என்பனவாகும். இப்படிகளெல்லாம் யார் யாரிடமிருந்து பெறப்பட்டன என்பதைச் சி.வை.தா. தொல்.பொருள் பதிப்புரையில் குறித்துள்ளார்.
'திரவிய லாபத்தை எவ்வாற்றானும் கருதி முயன்றிலேன். கை நஷ்டம் வராதிருப்ப தொன்றே எனக்குப் போதும். இது வரையிற் பதிப்பித்த நூல்களால் எனக்குண்டான நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இவ்வித முயற்சியிற் கையிடுவோர் நஷ்டமுறா திருத்தற் பொருட்டுச சர்வ கலாசாலைப் பரீட்சையிற் தேறி ஆங்காங்கு பெரும் உத்தியோகம் வகித்திருப்போர் தத்தம் சொய பாஷையில் அச்சிடப் படும் பூர்வ கிரந்தங்களில் ஒரு பிரதி வாங்குதல் அவர் கடமை, என்றெண்ணுகின்றேன்' என்று மனம் வெதும்பி நைகிறார் தமிழ்த்தாமோதரர்.
திருட்டு வேலை செய்கின்ற ஒருவன் தன்னைப் போலவே எல்லோரும் திருட்டு வேலை செய்யட்டும் என்று சொல்ல மாட்டான். ஆனால், நற்பணிகள் செய்யும் ஒருவனோ தான் செய்யும் பணிகளில் இன்பமும் பிறர் பிறர்க்கும் இம் மன்பதைக்கும் நலமும் விளைவது கண்டு எல்லோரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என உலகோர்க்கு அழைப்பு விடுப்பான். மனத்தளவிலும் எல்லோரும் இப்பணியைச் செய்தால் உலகம் எப்படியிருக்கும் என்று கருதிக் கொண்டே கரைவான். நம் தாமோதரர் செய்த பணியோ பொதுப்பணி. அத்தகைய அரும்பணியை அதன் முழுத் தன்மையும் கருதிச் செய்யத் தொடங்கிச் செய்தவர். ஆதலால், தாம் செய்யும் பணியைத் தமிழ் மன்பதையும் செய்ய வேண்டுமெனத் துடியாய்த் துடித்து வேண்டுகோள் விடுக்கின்றார்.
‘சங்க மரீஇய நூல்களால் வகுக்கப்பட்ட எட்டுத் தொகை பத்துப்பாட்டுள் எட்டுத் தொகையில் இக் கலித்தொகையும் பத்துப் பாடலுள் திருமுருகாற்றுப் படையுமே இப்பொழுது அச்சில் வந்தன. எஞ்சிய பதினாறனையும் பெயர் மாத்திரையானே அறிந்தாற் போதுமா? இவைகளைத் தங்கள் தங்களால் நன்கு மதிக்கப் பட்ட சில வித்துவான்களைக் கொண்டு பரிசோதிப்பித்து வெளியில் வரச் செய்யத்தக்க சீமான்கள் யாரும் இல்லையா! தமிழின் அருமையுணர்ந்த பெரியோர், மடாதிபதிகள் என்றின்னோர் இவற்றில் கடைக்கண் சாத்துமாறு சரஸ்வதி அனுக்கிரகிப்பளாக’ என்பன தாமோதரரின், உள்ள வேட்கையில் சிறு துளிகளேயாகும்.
‘இவரது (சி.வை.தாமோதரர்) தமிழார்வம் இவர் உள்ளத்தில் மங்கள ஒளியாய்த் திகழ்ந்து ஒரு காலைக்கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப் பிழம்பாகச் சுடர்விட்டு எரிந்தது’ என்று பிற்காலத்தில் பதிப்புத்துறையில் பல அரும்பணியாற்றிய வையாபுரிப்பிள்ளை சி.வை.தா. வின் உணர்வைத் தொட்டுக் காட்டுவார்.
பிறவிப் பணியே பதிப்புப் பணிதான்
உயிர்கள் யாவுமே அறிவுக் கூறுடையன. ஆயின் மாந்தனே அறிவுக் கூர்மையன். ஒவ்வொரு மாந்தனும் கூர்தலறப் படி ஒவ்வொன்றில் கூர்மையகப் பிறக்கின்றான்.அவ்வொன்று என்னவென்று ஒவ்வொருவரும் தத்தமக்குள் கண்டாக வேண்டும். இயற்கையும் ஒவ்வொன்றில் ஒவ்வோருயிரையும் அவ் வொவ்வொன்றிற்காக இயக்கி வருகின்றது. இஃது மெயம்மம். மாந்தப் பிறப்பு இவ்விலக்கு நோக்கியே இயங்கியாகல் வேண்டும். மாடு, மனை, மக்கள், வீடு, உறவு, சொத்து என்பன யாவும் ஒவ்வொருவரின் குறிக்கோளுக்கு உறுதுணையே அல்லாமல் அவை முதன்மையாக. இவ்வகையில், சி.வை. தாமோதரரின் வாழ்க்கையை ஊன்றி நோக்கினால் அவர், தமிழ்நூல் பதிப்புப் பணிக்காகவே பிறந்தவர் ; பிறப்பிக்கப்பட்டவர் என்பதை உணரலாம். ஓர் அறிஞன் தன்பணியை எங்குத் தொடங்கினானோ அல்லது எங்குத் தொடங்கும்படி இயற்கை பணித்ததோ அங்கேயே அங்கி ருந்தே தன் பணியை முறையாய்த் தொடர்ந்து தான், மேற் கொண்ட பணியையும் தன்னையும் செழுமைப்படுத்திக் கொள்வான்.
1887 இல் கலித்தொகையைப் பதிப்பித்து வெளியிடும் சி.வை.தாமோதரர்க்கு அப்போது அகவை 55. முதல் நூலாக நீதி நெறி விளக்கத்தை 1854 இல் வெளியிட்ட போது தாமோதரருக்கு அகவை 22. இளம் அகவையான 22 இல் பதிப்புப் பணியைத் தொடக்கிய சி.வை.தா. அதற்கும் முந்தைய கழியிளம் பருவத்திலேயே தமிழ் ஏடுகளைத் தேடும் பணியை மேற்கொண்டிருந்தார் என்பதை அவரின் கலித்தொகைப் பதிப்பு முன்னுரை வழி அறிந்தோம்.
'யான் முப்பத்தைந்து வருத்தின் முன் (அஃதாவது 1887 இலிருந்து முப்பத்தைந்தாணடு முன்பு) பிரமாதீச வரும் ஒரு தரம் அருமையான தமிழ் நூல்கள் தேடி யாழ்ப்பாணத்திலிருந்து இக்கண்டத்தில் வந்து நடமாடிய போது கூடலூரில் மஞ்சக் குப்பத்தில் சண்முக உபாத்தியாயரென்றோர் வயோதிகரும் புதுச்சேரியில் நெல்லித் தோப்பில் சொக்கலிங்கம் பிள்ளை என்றோர் தமிழ்ப் பண்டிதரும் கலித்தொகை வைத்திருந்து என் ஞாபகத்திற்கு வர அந்த இடங்களில் சென்று விசாரித்தேன்'.
சி.வை.தா. 1887 க்கு முப்பத்தைந்து ஆண்டுக்கு முன் அஃ;தாவது 1852 இல் 20 அகவையராயிருந்தார். அப்பொழுதே அவர் தமிழ் நூல்களின் அருமை உணர்ந்தவராய் இருந்தபடியினாலேயே முப்பத்தைந்தாண்டு கடந்த 55 ஆம் அகவையிலும் பழைய நினைவு நிற்கும்படித்தாய் இருந்ததென்பதை இதன்வழி அறிகின்றோம்.
தாமோதரர் 1856 இல் தினவர்த்தமானிக்காகத் தம் 24 ஆம் அகவையில் சென்னைக்கு வந்து சேர்ந்ததன் முன் 1852 ஆம் ஆண்டாகிய 20 ஆம் அகவையில் முதன் முதலாகச் சென்னை வந்திருப்பார் போல் தெரிகின்றது. இவ்விருபதாம் அகவையில் வந்த வருகை, அவர் கலித்தொகை முன்னுரையில் சுட்டியுள்ளது போல் தம் தந்தையாருடன் மேற்கொண்டிருந்த வருகையாகத்தெரிய வருவதால் அதுவே முதல் வருகை என்று கொள்ளலாம். 1856 ஆம் ஆண்டின் தினவர்த்தமானிப் பணியைத் தாண்டி 1857 இல் மாநிலக் கல்லூரித் தமிழாசிரியப் பணியேற்ற பின் உள்ளே உறைந்து கிடந்த தமிழ்நூல் தேடும் வேட்கை மேலும் கிளர்ந்தெழ அடிப்படையாய் அமைந்திருக்க வேண்டுமெனக் கொள்ளலாம். சிறு அகவையிலேயே இவையிவை செய்யத்தக்க பணிகள் என மனங்கொண்டிருந்த தாமோதரர்க்கு வாய்ப்பும் வசதியும் வரும் போது வேகம் பிறந்தது இயல்பேயாகும்.
1857 இல் மாநிலக் கல்லூரித் தமிழாசிரியப் பணியேற்ற போது தமிழ் கற்பிப்பதற்கு தூய தமிழ் இலக்கண நூலாக ஒன்றும் இல்லாதுபோன மனக் குறைவில்தான் தாமோதரர் தொல்காப்பியப் பதிப்புப் பணியைத் தொடங்கியிருப்பார் போல் தெரிகின்றது. மழவை மாகலிங்க ஐயரின் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்கினியம் 1848 ஆம் ஆண்டளவில் வெளியாகியிருக்க, ஏனைய சொல்லும் பொருளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து கிடந்ததும் தாமோதரர்க்கு தொல்காப்பியப்பதிப்பு முதன்மையாகப்பட்டடிருக்க வேண்டும். தாமோதரர், பல நூல்களைப் பதித்து வெளியிட்டிருப்பினும் அவர் பெரிதும் விரும்பி உழைத்துப் பாடுபட்டு வெளியிட்டவை தொல்காப்பியமும் கலித்தொகையுமே எனலாம். நூற்பதிப்பு வெளியீட்டிலும் பழந்தமிழ் நூற்பதிப்பே அவரைப்பெரிதும் செய்யத் தூண்டிய பதிப்பென்று நாம் கருத வேண்டியுள்ளது.
சி.வை.தாமோதரர் காலம் வரும்வரை எவரும் பழந்தமிழ் நூற்சுவடிகளைத் தேடிப்பதிப்பிக்கும் பணியை மேற்கொள்ளவில்லை. தாமோதரனார்க்கு முன்னரத் தமிழில் வெளிவந்த பதிப்புப் பணிகள் இவையிவை என்றும், இவற்றுள் தாமோதரர் மேற்கொண்ட தமிழ் நூற்பணி எத்தகையதென்றும் வையாபுரிப் பிள்ளை மிகத் தெளிவாகத் தம் தமிழ்ச்சுடர் மணிகள் நூலில் தாமோதரர் பற்றிக் கூறுமிடத்துத் தொகுத்துத் தந்துள்ளார்.
‘ஸ்ரீஆறுமுக நாவலர் சைவசமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்வான் தாண்டவராய முதலியார் திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சியற்றுவதில் ஒடுங்கி விட்டார்கள். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினிVர்க்கினியார் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்று விட்டார்கள். களத்தூர் வேதகிரி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமாளையர் முதலியோர் குறளுக்குத் தெளிபொருள், பிரபுலிங்க லீலை, சூடாமணி நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திரு வேங்கட முதலியார் இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலியன பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஸ்ரீ உ.வே. சாமிநாத ஐயவரவர்கள் அப்பொழுதுதான் சீவகசிந்தாமணிப் பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, நமது பிள்ளையவர்கள் தன்னந் தனியராய்ப் பண்டைத் தமிழ்ச் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெரும்முயற்சியை மேற்கொண்டனர்’.
காரணம், சமய நூல்களெல்லாம் மடங்களாலும் சமயப் பற்றாளர்களாலும் பேணப்பட்டடிருந்த நிலையில் பழந்தமிழ் நூற்சுவடிகள் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தன.
சமயப் பித்தங்கொண்ட ஈசான தேசிகர் திருவாடுதுறையின் மடப்புலவர். இவர் சமய நூல்களை விட்டு விட்டு சமயம் சாராத நூல்களைக் கற்போர் இழிவானவர் என்ற கருத்தினை இலக்கணக் கொத்து முன்னுரையில் எழுதியுள்ளார்.
Sunday, October 17, 2010
செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழ்த் தாமோதரனார்
செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழ்த் தாமோதரனார்எம்.கே.ஈழவேந்தன் எம்.பி.
செல்லரித்து சீரழிய இருந்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் பலர். அவர்களுள் மூவர் எம் நினைவில் நிற்கின்றனர். இதனைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க.தனது "வாழ்கைக் குறிப்புக்கள்" என்ற நூலில் தனக்கே உரிய தனிநடையில் இம்மூவரின் பெருமையை முறையே சாற்றிச் செல்கின்றார். இதோ அவர் செப்பியவை. "பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சுவாமிநாத ஐயர்" இவ்விதம் திரு.வி.க.வைவிட வேறு யார் தமிழ் அறிஞர் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.
தமிழக அறிஞர்கள் மறைந்தபோது ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகள் நிறைய உள்ளன, ஆனால், ஈழத்து அறிஞர்கள் மறைந்தபோது அதே துடிப்புடன் தம் துயரைத் தெரிவித்த தமிழக அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனினும் புறநடையாக - விதிவிலக்காக நம் தாமோதரனார் மறைந்தபோது அவரின் அளவிடற்கரிய பெருமையை புகழ் படைத்த பரிதிமாற் கலைஞர் தமது உள்ளத்தில் எழுந்த துயர் உணர்வினை காலத்தாற் சாகாது ஞாலத்தில் நிலைத்து நிற்கின்ற முறையில் உள்ளம் உருகும் பாடலாக பின்வரும் முறையில் துயர் பெருக்கெடுக்கப் பாடியுள்ளார்.
"காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல்
நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த
தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர்
தாமோ தரமுடை யார்"
வேறு சொற்களில் விளம்பின், தாமோதரனாரின் தரம் உணர்ந்தவர்கள் தான் அவரின் பெருமையை எடுத்துரைக்க முடியும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் ஈழத்தின் ஓர் அங்கமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் தலைநகராம் நல்லூரில் 05.12.1822 இல் ஆறுமுகநாவலர் பிறக்க 10 ஆண்டுகள் கழித்து சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.09.1832 இல் வைரவநாதன் பெருந்தேவி ஆகியோருக்கு தாமோதரனார் மகனாகப் பிறந்தார். தமிழ் இன எண்ணிக்கையில் ஏற்றத்தில் அக்கறை கொண்டிருந்த இவரின் தந்தையார் எட்டுக் குழுந்தைகளைப் பெற்றார். அவர்களுள் மூத்தவர் நம் தாமோதரனார். தந்தை ஆசிரியராக இருந்ததனால் தந்தையின் அறிவு இவரின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. அத்தோடு இவரின் மேல்நிலைக் கல்வி மேம்பட சுன்னாகத்து முத்துக்குமார நாவலர் தூண்டுகோலாக விளங்கினார். தமிழ்க் கல்வியில் ஊன்றிக் கவனம் செலுத்திய இவர் 1844 - 1852 வரையான காலப்பகுதியில் தெல்லிப்பழை மிஷன் பாடசாலை, வட்டுக்கோட்டை கல்வி நிலையம் ஆகியவற்றில் பயின்றதோடு, யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலத்தில் ஆழமான அறிவைப் பெற்றார்.
தனது இருபதாம் அகவையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக விளங்கிய இவர் 1856 இல் `பெர்சிவல்' பாதிரியார் சென்னையில் நடத்திய "தினவர்த்தமானி" இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் சென்னை வாழ்வு 1856 இல் தொடங்க 1857 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் தமது ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். இம்மாநிலக் கல்லூரியில் தான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதஐயரும் சில காலம் ஆசிரியப் பணி புரிந்ததை இங்கு நினைவு கொள்வோமாக. இக்கல்லூரியின் முன்றிலில் உ.வே.சாமிநாதஐயரின் சிலை அவரின் பெருமை பேசும் முறையில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இச்சென்னை மாநிலக் கல்லூரியில் இலங்கை அரசியலில் அரை நூற்றாண்டு அரசோச்சிய சேர் பொன்.இராமநாதன் இங்கு பயின்றவர் என்பது இங்கு பெருமையுடன் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அமைதி காண மிக நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் பணி ஆற்றிய ஜி.பார்த்தசாரதி அவர்களும் இங்கேயே பயின்றார். இவருடன் பயின்றவர் இலங்கையின் கல்வித்துறை இயக்குனராக விளங்கிய திருமதி இரத்தினா நவரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி இரத்தினா நவரத்தினம் பல நூல்களை எழுதியதோடு "திருவாசகத்துக்கு" அழகிய ஆங்கில உரை வழங்கியதோடு யோகர்சுவாமிகளின் புகழையும் ஏற்றமிகு ஆங்கில நடையில் ஒரு நூல் வரைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் சிக்கலை ஒட்டி பார்த்தசாரதியை நான் அடிக்கடி சந்தித்த போது திருமதி இரத்தினா நவரத்தினத்தின் நலன் பற்றி விசாரிக்க அவர் தவறியதில்லை. இவ்வினிய செய்தியை திருமதி இரத்தினா நவரத்தினத்துக்கு நான் சொல்லியபோது நன்றி மறவா நண்பர் எம் பார்த்தசாரதி என்று கூறி உவகையுற்றார்.
எம் பணியையும் உணர்ந்திருந்த நம் இரத்தினா நவரத்தினம் `ஙுணித ச்ணூஞு ச் –ச்ண ணிஞூ ஐஞீஞுச்ண் ச்ணஞீ ஐஞீஞுச்டூண்" (உங்களிடம் எண்ணங்கள் உண்டு. அந்த எண்ணங்களில் ஏற்றமும் உண்டு) என்று எம்மை ஏற்றிப் போற்றியதையும் இங்கு நினைவு கூர்ந்து உவகையுறுகிறேன்.
தமிழகத்தில் தாமோதரனாரின் பல்துறை பணி
12.09.1832 இல் தமிழீழத்தில் தோன்றிய தாமோதரனார் தமிழகம் சென்று மாநிலக் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதல் இளங்கலை (ஆ.அ.) பட்டதாரியானார். தாமோதரனாருடைய நிழற்படம் சென்னை பல்கலைக்கழகத்து நூலகத்தில் தனிச்சிறப்புடன் பேணிக் காக்கப்படுகிறது. அவரது நினைவுக் கூட்டங்களின்போது இவ்வோவியத்திற்கு மலர்மாலை சூட்டி சிறப்புச் செய்யப்படுகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்து கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்கு மாற்றம் பெற்றுச் சென்ற இவர் தனது 39 ஆவது அகவையில் 1871 இல் இளங்கலைச் சட்டம் (ஆ.ஃ.) பட்டம் பெற்றார். அரை நூற்றாண்டை இவர் எய்கையில் 1882 இல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு 1884 இல், சட்டத்துறையில் இவர் பெற்றிருந்த சிறப்புக் காரணமாக புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவராக பணியாற்றும்படி இவருக்கு அழைப்புக் கிடைத்தது. 1890 இல் இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு 1895 இல் `ராவ் பகதூர்' பட்டம் வழங்கப்பட்டது. தமிழீழத்தில் தோன்றிய இவர் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள புரசைவாக்கம் என்ற பகுதியில் தனது அறுபத்தொன்பதாவது அகவையின் தொடக்கத்தில் 1901 ஆண்டு ஜனவரி முதலாம் நாள் இறையருளில் இரண்டறக் கலந்தார்.
நம் சி.வை.தாமோதரனார் ஆற்றிய பணிகள் பல. ஆனால், அவருக்கு அழியாப் புகழைத் தந்து நிற்பது அவர் பதிப்பித்த நூல்களாகும். "தமிழீழம் தந்த தாமோதரனார்" என்ற தலைப்பில் சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கும் முனைவர் (டாக்டர்) கு.அரசேந்திரன் தாமோதரனார் தான் வரைந்துள்ள நூலில் பதிப்பித்த நூல்களை பின்வரும் முறையில் ஆண்டடிப்படையில் தந்திருப்பது எமக்கு அகமகிழ்வினைத் தருவதோடு, அவரின் ஆய்வுள்ளத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
1. நீதிநெறி விளக்கம் 1854
2. தொல் சேனாவரையம் 1868
3. வீரசோழியம்
பெருந்தேவனார்
உரையுடன் 1881
4. இறையனார் களவியல் 1883
5. தணிகைப் புராணம் 1883
6. தொல் பொருள்
நச்சினாக்கினியம் 1885
7. கலித்தொகை 1887
8. இலக்கண விளக்கம் 1889
9. சூளாமணி 1889
10. தொல் எழுத்து 1891
11. தொல் - சொல் (நச்) 1892
மேற்குறித்தவற்றை வெளியிட்ட தாமோதரனார் 1898 இல் அகநானூற்றை வெளியிட எடுத்த முயற்சியும் அவர் வரலாற்றிலிருந்து அறியத்தக்கதாக இருக்கிறது. சொற்பிறப்பு ஆய்வாளர் முனைவர் கு.அரசேந்திரன் கூற்றுப்படி "பதினொரு நூல்களில் மகாலிங்க ஐயர் பதிப்புத் தவிர பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன்முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்" என்று வலியுறுத்திச் செல்லும் கூற்று தாமோதரனாரின் தலைசிறந்த பதிப்புப் பணிக்குச் சான்று பகர்கிறது.
"தமிழீழம் தந்த தாமோதரனார்" பற்றி முனைவர் கு.அரசேந்திரன் வரைந்துள்ள நூல் குறள் போல் குறுகிய வடிவம் கொண்டிருப்பினும் இதுவரை தாமோதரனார் பற்றி ஏனைய அறிஞர்கள் குறிப்பிடாத பல அரிய குறிப்புகளை இதனில் தந்துள்ளதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் "திருக்குறளில்" கரைகண்ட பேராசிரியர் இளங்குமரன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாளர் முத்துக் குமாரசாமி உட்பட பல அறிஞர்கள் இந்நூலை உகந்து போற்றியுள்ளதனால்
"தமிழைக் கொண்டு உண்மையை
வாழ வைக்கும் அறம்
உண்மையைக் கொண்டு தமிழை
வாழவைக்கும் திறம்....
இவர்தான் அரசேந்திரன்"
என்று ஆய்வாளர் அரசேந்திரனை உச்சி மீது வைத்து உவந்து போற்றும் நம் கவிஞர் காசி. ஆனந்தன் மேலும் ஒரு படி சென்று,
"சூழ்ச்சியாளர் பொய்யும் புரட்டும்
களைந்து - வளைவுற்ற தமிழும்
தமிழ் மண்ணும் நிமிர்த்தும்
உயிர்ப்புள்ள ஆய்வும் எழுத்தும்
இவர்"
என்ற வரிகள் ஊடாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட நம் தாமோதரனாரின் பல வியத்தகு பணிகளை மக்கள் முன் அரசேந்திரன் நிறுத்தியுள்ளார் என்பதை நம் கவிஞர் நிலை நாட்டியுள்ளார்.
தன் பணி பற்றித் தாமோதரனார்
தன் வாழ் நாள் முழுவதையுமே பதிப்புத் துறைக்கு அர்ப்பணித்த நம் தாமோதரானார், தாம் ஏன் இப்பதிப்புத்துறையில் மூழ்கித் திளைத்தார் என்பதையும் பின்வரும் சொற்களில் எடுத்துக் காட்டுகிறார். இச் சொற்கள் அவர் உள்ளம் உருகி வெளியிட்ட சொற்களாகக் காட்சியளிக்கின்றன. இதோ அவர் மொழிந்தவை.
"நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளுக்கு வந்த கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே என்னை இத் தொழிலில் வலிப்பது"
"பல பெரும் வித்துவான்கள் இந் நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலால் பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும்பட்ட சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று"
கற்றோர் ஏற்றும் கலித்தொகை
தாமோதரனார் பதிப்பித்த பல நூல்களில் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது அவரின் "கற்றோர் ஏற்றுங் கலித்தொகை"ப் பதிப்பேயாகும். அவரின் 59 ஆவது அகவையில் 1887 இல் இந்நூல் பதிக்கப்பட்டது. தனது அகவை 22 இல் 1854 இல் நீதிநெறி விளக்கத்தை தனது முதல் நூலாக வெளியிட்டவரும் இவரே, கலித்தொகைச் சுவடியை தான் பதிப்பிக்க முனைந்த போது தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பின்வருமாறு அவர் நெஞ்சம் நெகிழ உரைக்கிறார். கலித்தொகைப் பிரதிகள் தேடயான் பெற்ற கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூல பாடப்பிரதி, அது தலையுங் கடையுமின்றிய குறைப் பிரதி, மேலும் பெரும்பாலும் எழுத்துகள் சிதைந்து ஒரு பாட்டின் சேருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப்புண்டாய் நீக்கிவிட்டேன். "பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காக தேடிய போது ஷ்ரீலஷ்ரீ ஆறு முகநாவலரின் பிரதி அகப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அருமை உணர்ந்து அது எப்படியும் உலகிற்குப் பயன்பட வேண்டும் என்னும் அவாவுற்று பல ஆதீனங்களுக்கு விண்ணப்பம் செய்த போது தனக்குத் திருவாவடுதுறை ஆதீனம் துணை நின்றது" என்று கூறி ஆறுதலடைகிறார்.
இவை அனைத்தையும் நினைவில் வைத்துத் தான் தாமோதரனாரை மதிப்பிடுகின்றபோது முனைவர் அரசேந்திரன் தாமோதரனாருடைய பெருமையை ஆய்வுள்ளத்தோடு இவ்விதம் மொழிகிறார். "சமயப்பற்று மிகுந்தவரே நம் தாமோதரன். என்றாலும் தமிழின், தமிழரின் தனிப் பெரும் மாண்புகளைச் சமஸ்கிருதம் விரவாத தனித் தமிழ் நூல்களாகப் பழந்தமிழ் நூல்களே இருந்தபடியால் அவற்றை மீட்டலே தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் அடிப்படைப் பணிகளின் முதன்மை என்று கருதியிருக்கின்றார். முனைவரின் இக்கூற்றை வரவேற்று நாமும் வழிமொழி கூறும் நிலையிலிருக்கிறோம்.
தமிழ் அறிஞர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு உரிய இடம் வழங்குவதில் தமிழ் ஆய்வாளர் வையாபுரிப்பிள்ளைக்கு தனிச் சிறப்புண்டு. அவர் தனது "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் தாமோதரனார் பற்றி வழங்கியுள்ள மதிப்பீடு அவர் நடுநிலை நின்றே தாமோதரனாரை மதிப்பீடு செய்துள்ளார் என்பதற்கு சான்று கூறுகிறது. "ஷ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்துவான் தாண்டவராசெல்லரித்து சீரழிய இருந்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் பலர். அவர்களுள் மூவர் எம் நினைவில் நிற்கின்றனர். இதனைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க.தனது "வாழ்கைக் குறிப்புக்கள்" என்ற நூலில் தனக்கே உரிய தனிநடையில் இம்மூவரின் பெருமையை முறையே சாற்றிச் செல்கின்றார். இதோ அவர் செப்பியவை. "பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சுவாமிநாத ஐயர்" இவ்விதம் திரு.வி.க.வைவிட வேறு யார் தமிழ் அறிஞர் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.

தமிழ் அறிஞர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு உரிய இடம் வழங்குவதில் தமிழ் ஆய்வாளர் வையாபுரிப்பிள்ளைக்கு தனிச் சிறப்புண்டு. அவர் தனது "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் தாமோதரனார் பற்றி வழங்கியுள்ள மதிப்பீடு அவர் நடுநிலை நின்றே தாமோதரனாரை மதிப்பீடு செய்துள்ளார் என்பதற்கு சான்று கூறுகிறது. "ஷ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்துவான் தாண்டவராயன் முதலியார், திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சேற்றுவதில் ஒடுங்கி விட்டார்கள். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்று விட்டார்கள். களத்தூர் வேதசிறி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமானையர் முதலியோர் குறளுக்குக் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி, நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலிய பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஷ்ரீ உ.வே. சாமிநாத ஐயர் அப்போது தான் சீவகசிந்தாமணி பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமது பிள்ளை அவர்கள் தன்னந்தனியராய்ப் பண்டைத் தமிழ் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இவ்விதம் தாமோதரனார் தகைமை பற்றி கூறிய பேராசிரியர் வையாபுரி அவர்கள் மேலும் ஒரு படி சென்று "தாமோதரர் தமிழ் ஆர்வம் அவர் உள்ளத்திலே மங்கள ஒளியாய் திகழ்ந்து ஒரு காலைக் கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப் பிளம்பாக சுடர் விட்டெரிந்தது" என்று எம் தாமோதரனார் புகழை உச்ச நிலையில் வைத்து உவந்து போற்றுகிறார். நம் பண்டிதமணி கணபதிப்பிள்ளையும் இத்துறையில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையும் கருத்தினை ஏற்றிய நிலையிற் போலும் "பாழ்பட்டுக் கிடந்த பண்டைய தமிழ் ஏட்டுச் சுவடிகளுக்கு எப்படியும் உயிர் கொடுக்க தாமோதரனார் ஆற்றிய பணி தலையாய பணி" என்று ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளார். நம் சி.வை. தாமோதரனார் 01.01.1901 இல் சென்னையில் மறைந்தபோது தனக்கு வழிகாட்டியாக விளங்கிய தண்டமிழ் தாமோதரனாருடைய சிறப்பை பின்வரும் முறையில் உள்ளமுருகப் பாடி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார். இதோ அவர் பாடியவை,
"தொல்காப் பியமுதலாந் தொன்னூல் களைப்பதிப்பித்து
ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின்- அல்காத்
தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை
யாமோ தரமியம்ப வே"
என்ற பாடலில் "பண்பின் அல்காத் தாமோதரர்" என்று குறிப்பிட்டிருப்பது தமிழ் உள்ள வரையில் தாமோதரனார் புகழை நாமும் நம் வழித்தோன்றல்களும் ஏற்றிப்போற்றுவது ஏற்புடைத்து என்பதை எடுத்துரைக்கின்றது அன்றோ.யன் முதலியார், திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சேற்றுவதில் ஒடுங்கி விட்டார்கள். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்று விட்டார்கள். களத்தூர் வேதசிறி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமானையர் முதலியோர் குறளுக்குக் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி, நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலிய பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஷ்ரீ உ.வே. சாமிநாத ஐயர் அப்போது தான் சீவகசிந்தாமணி பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமது பிள்ளை அவர்கள் தன்னந்தனியராய்ப் பண்டைத் தமிழ் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இவ்விதம் தாமோதரனார் தகைமை பற்றி கூறிய பேராசிரியர் வையாபுரி அவர்கள் மேலும் ஒரு படி சென்று "தாமோதரர் தமிழ் ஆர்வம் அவர் உள்ளத்திலே மங்கள ஒளியாய் திகழ்ந்து ஒரு காலைக் கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப் பிளம்பாக சுடர் விட்டெரிந்தது" என்று எம் தாமோதரனார் புகழை உச்ச நிலையில் வைத்து உவந்து போற்றுகிறார். நம் பண்டிதமணி கணபதிப்பிள்ளையும் இத்துறையில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையும் கருத்தினை ஏற்றிய நிலையிற் போலும் "பாழ்பட்டுக் கிடந்த பண்டைய தமிழ் ஏட்டுச் சுவடிகளுக்கு எப்படியும் உயிர் கொடுக்க தாமோதரனார் ஆற்றிய பணி தலையாய பணி" என்று ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளார். நம் சி.வை. தாமோதரனார் 01.01.1901 இல் சென்னையில் மறைந்தபோது தனக்கு வழிகாட்டியாக விளங்கிய தண்டமிழ் தாமோதரனாருடைய சிறப்பை பின்வரும் முறையில் உள்ளமுருகப் பாடி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார். இதோ அவர் பாடியவை,

என்ற பாடலில் "பண்பின் அல்காத் தாமோதரர்" என்று குறிப்பிட்டிருப்பது தமிழ் உள்ள வரையில் தாமோதரனார் புகழை நாமும் நம் வழித்தோன்றல்களும் ஏற்றிப்போற்றுவது ஏற்புடைத்து என்பதை எடுத்துரைக்கின்றது அன்றோ.

Thursday, October 14, 2010
சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் கு.அரசேந்திரன்
சிங்கப்பூர் ம.தி.மு.க. தோழர்களுடன் அறிஞர் கு.அரசேந்திரன்
முனைவர் கு.அரசேந்திரன் நண்பர் திருமாறன் அவர்கள்
சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகம் முன் முனைவர் கு.அரசேந்திரன்
சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழக வகுப்பு மாணவர்களுடன் முனைவர் கு.அரசேந்திரன்
மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா.திருமாவளவனுடன் முனைவர் கு.அரசேந்திரன்
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயில் முன்பாக முனைவர் கு.அரசேந்திரன்
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் கழகத்தில் கு.அரசேந்திரன்
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் கழகக் கட்டிடக் கூட்டத்தில் வரவேற்கும் திருமாறன்.
முனைவர் கு.அரசேந்திரன் உரையாற்றுகிறார்.
சிங்கப்பூர் தேசிய நூலகம் முன் முனைவர் கு.அரசேந்திரன், பேராசிரியர் அண்ணாதுரை
சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் கண்காட்சிப் பலகையில் வைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய நூலை பார்வையிடுகிறார் முனைவர் கு.அரசேந்திரன்
நண்பர் கோ.இராமலிங்கம் அவர்களுடன் முனைவர் கு.அரசேந்திரன்

Subscribe to:
Posts (Atom)